உச்ச நீதி மன்றத்தின் உச்சக் கட்ட தலையீடுகள்

நாட்டின் சுதந்திரத்தையும், நேர்மையான ஆட்சியையும் நிலைநாட்டும் கடமை அரசு – உச்ச நீதிமன்றம் – பார்லிமென்ட் ஆகியவைகளுக்கு உண்டு. அதற்கான விதிகள் அடங்கிய பைபில் தான் அரசியல் சாசனமாகும். அதை இந்த மூன்று அமைப்புகளும் நேர்மையாக எந்தவிதமான உள்நோக்கமும் இன்றி நாட்டின் நலனை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி நினைவில் கொண்டு கடைப்பிடித்து, நாட்டு மக்களுக்கு ‘நண்பன், தத்துவஞானி, வழிகாட்டி’ என்ற மூன்று நிலைகளில் ஒரு சிறந்த நேர்மையான ஆட்சியை மக்களுக்கு அளிக்கும் நிலையில் இந்த ஒவ்வொரு மூன்று அமைப்பும் செயல்பட வேண்டும். இருப்பினும் இந்த மூன்று அமைப்பிலும் அமர்ந்திருப்பவர்கள் பொதுமக்களைப் போன்ற ஆனால், அவரவர்களின் துறைகளில் படித்த அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் ஜனநாயக அரசியலில் இறுதிக் குரல் பொதுவாக மக்கள் கருத்துக்களை மதிப்பதாக இருப்பது ஒரு பொது விதி என்பதையும் இங்கு நாம் மனத்தில் கொள்ள வேண்டும். சமீபகாலமாக உச்சநீதி மன்றம் சட்டத்தின் அடிப்படையை மட்டும் கருத்தில் கொண்டு, தங்கள் முன் வைக்கப்படும் வாதங்கள் – சாட்சிகள் ஆகியவைகளின் ஆதாரத்தில் தீர்ப்பு வழங்கும் போது, தங்களின் தனிப்பட்ட கொள்கைகளுக்கும் இட...