சபரிமலை தரிசனத்தில் தலையிடும் உச்ச நீதிமன்றம்

சபரிமலை தரிசனத்தில் தலையிடும் உச்ச நீதிமன்றம் உச்ச நீதி மன்றத்தின் ஐந்து நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதியைத் தவிர்த்து நான்கு ஆண் நீதிபதிகள் 28-09-2018 வெள்ளிக் கிழமை அன்று ‘அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம். பெண்களில் மாதவிடாய் வயதான 10-லிருந்து 50-வரையில் உள்ள பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்லும் தடை நீக்கப்பட்டுள்ளது’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். அதற்கு அவர்கள் கூறி உள்ள காரணங்கள்: “பக்தியில் ஆண்-பெண் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. பெண்கள் ஆண்களை விட கீழானவர்களோ அல்லது மதிப்பில் குறைவானவர்களோ இல்லை. மத ஆணாதிக்கம் நம்பிக்கையின் அடிப்படையில் வெற்றி கொள்ள அனுமதிக்க முடியாது. நம்பிக்கைச் சுதந்திரத்தில் பெண்ணின் உடல் மற்றும் பாலியல் ரீதியான காரணங்களைக் காட்டுவதை அனுமதிக்க முடியாது. மதம் என்பது அடிப்படையில் ஒரு வாழ்க்கை முறையாகும். இருப்பினும், கடைப்பிடிக்கப் படும் சில வழிமுறைகள் தவறானவைகளாக இருக்கும். அதைக் களைவது அவசியம். ஐயப்ப்ப பக்தர்கள் இந்து மதத்தின் தனியான பிரிவில்லை. கேரள ஹிந்து மத வழிபாட்டுத் தல விதிகள் 1965-ல் உள்ள விதி 3 (b) தான் கு...