கர்நாடகா மாநிலத் தேர்தல் – 2018 – ஒரு கண்ணோட்டம்

கர்நாடகாவில் உள்ள மொத்த இடங்களான 224-ல், 222 இடங்களில் தேர்தல் நடந்து அதன் தீர்ப்பு பா.ஜா.க.வுக்கு 104 இடங்களையும், காங்கிரசுக்கு 78 – ஜே.டி.எஸ். + பி.எஸ்.பி. 37 + 1, மற்றவைகள் – 2 என்ற அளவில் அமைந்துள்ளது. ஆட்சி அமைக்க 8 இடங்கள் அதிகமாக பா.ஜா.க.வுக்குக் கிடைக்காத நிலையில், காங்கிரஸ் – ஜே.டி.எஸ். கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது. பா.ஜா.க. அதிக இடங்களைப் பெற்ற காரணத்தல், ஆட்சி அமைக்க கவர்னரால் அழைக்கப்பட்டும், முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டும், சட்டசபையில் ஓட்டெடுப்பிற்கு முன்பே பதவி விலகி விட்டார். இதற்கு காங்கிரஸ் – ஜே.டி.எஸ். எதிர்ப்பைக் காட்டியும், உச்ச நீதிமன்றத்தை நாடியும் அதில் முக்கியமாக உடனேயே முதல்வர் எடியூரப்பா தன் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று தீர்ப்பைப் பெற்று, எடியூரப்பாவைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடி உள்ளது. இதில் எதிர்கட்சிகள் கவர்னர் பா.ஜா.வை முதலில் ஆட்சி அமைக்க அழைத்தது சுப்ரீம் கோர்ட் பொம்மை வழக்குத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், தங்கள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்குத் தான் ப்ரோ டெர்ம் ஸ்பீக்கர் பதவி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்த...