நெஞ்சு பொறுக்குதில்லையே! – பசியால் வாடிய ஆதிவாசி அடித்துக் கொலை

ஒரு கிலோ அரிசி திருடியதற்காக ஆதிவாசி 27 வயது வாலிபன் மாது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான். கேரளாவில் பாலக்காட்டிற்குப் பக்கத்தில் உள்ள அட்டபாடியில் உள்ள கடுகுமன்னா என்ற கிராமத்தில் உள்ள மளிகைக் கடையில் அரிசி திடினான் என்பதற்காக அந்த ஏழை ஆதிவாசி மாது 22-ம் தேதி பிப்ரவரி 2018 அன்று மிகவும் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு, கம்பால் அடிக்கப்பட்டு, தாகத்தால் தவித்த அவனுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் நெடுந்தூரம் நடத்தியும் கொடுமைப்படுத்தி உள்ளனர். காட்டிலாகா அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து விட்டார்களா? என்பதும் தெரியவில்லை. ஏனென்றால், அந்தக் காட்டிற்குள் நுழைய அனுமதி வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. பாலக்காடு ஊரில் ஆட்டபாடியில் உள்ள கடுகுமன்னா ஆதிவாசி காலனியைச் சேர்ந்தவன் மாது. ஆட்டப்பாடி கேரளாவில் இருக்கும் ஒரு முக்கியமான ஆதிவாசி காலனியாகும். சரியான சத்துணவில்லாமலும், பட்டினியாலும் அங்குள்ள பல ஆதிவாசிக் குழந்தைகள் சமீப வருடங்களில் இறந்துள்ளார்கள். அங்குள்ள ஆதிவாசிகளின் மக்கள் தொகை சுமார் 30% அளவில் 1951-ல் உள்ள மக்கள் தொகையை விட குறைந்து விட்டது. பக்கத்தில் உள்...