பொது சிவில் சட்டம் இந்தியாவில் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்

இந்தியா ஒரு ஜனநாயக நாடு . அதன் அரசியல் தன்மையை நிர்ணயிப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் . அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் அரசு கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகள் - (Directive Principles to State Policy) என்ற IV பகுதியில் Article 44- ல் சொல்லப்பட்டுள்ள கோட்பாடு இது தான் : இந்திய குடிமகனுக்கான பொதுவான சிவில் சட்டம் - மத்திய - மாநில அரசாங்கங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும் பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் . அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகளின் நோக்கம் இந்திய மக்கள் அனைவரும் ஒரு சிறந்த வாழ்வினைக் கடைப்பிடிக்கும் வகையில் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் அமைய வழிவகுப்பதாகும் . அரசியல் சாசனம் ஆர்டிகில் 44- ல் பொது சிவில் சட்டம் அமல் படுத்தப் படவேண்டும் என்று கூறும் போது , ஏன் இதை மத்திய - மாநில அரசாங்கம் செய்யாமல் இருக்கிறது ? - என்ற நியாயமான கேள்வி எழுகிறது . 1956 ஆண்டிலேயே ஹிந்துக்களுக்கான நான்கு சட்டங்களான - ஹிந்து திருமணச் சட்டம் , வாரிசு உரிமைச் சட்டம் , உரிய வயது வராதவர் மற்றும் காப்புநில...