ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரசின் தர்மசங்கடம் ஆக்கம்: பவித்திரன்

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு இத்தாலிய கீழ்க்கோர்ட்டில் அக்டோபர் 2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட ஒன்று என்பதை வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டு வர ஆசைப்படுகிறேன் . Finmeccanica என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரியான Giuseppe Orsi என்பவரையும் , முந்தைய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத் தலைவரான Bruno Spagnolini ஆகிய இருவர்களுடன் இந்தியாவின் முந்தைய விமானப் படைத்தளபதி எஸ் . பி . தியாகியையும் போதிய ஆதரமில்லை என்று சொல்லி அவர்கள் அனைவரையும் ஊழல் குற்றச் சாட்டிலிருந்து கீழ்க்கோர்ட் விடுவித்தது . ( இத்தாலியைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஃபின்மெகானிகா என்ற தாய் நிறுவனத்தின் கிளைதான் யு . கே . யில் உள்ள அகஸ்டாவெஸ்ட்லேண்டாகும் .) இருப்பினும் , அந்த கோர்ட் அந்த இரு இத்தாலிய அதிபர்களையும் ‘ தவறான விலைப்பட்டியல் ரசீது ’ தயார் செய்த குற்றத்திற்காக குறைந்த பட்ச தண்டனையாக இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது . அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு இத்தாலி மிலான் மேல் கோர்ட்டில் தொடங்கப்பட்டது . ஏப்ரல் 2016 அன்று மேல் கோர்ட் தீர்ப்பு வழங்கியது ....