பெல்ஜியம் - யு.எஸ். - சவுதி அரேபியா நாடுகளில் மோடியின் அரசுப் பயணம் பற்றிய தொகுப்பு வாய்மை நிருபர் - பவித்திரன்

At Maalbek Metro Station, PM N arendramodi remembers India's Raghavendran Ganeshan & other victims of tragic attack மார்ச் மாதம் 30- ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3- ம் தேதி வரை மோடியின் அந்த 3 நாடுகளில் அரசுப் பயணம் முடிவானது . அந்த முன்று நாட்டின் பயணத்தில் முக்கிய நோக்கம் : பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் நடைபெறும் 13- வது இந்திய - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளல் , அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறும் அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றல் , சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் ஆட்சி செய்யும் ராஜ குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து இரு நாட்டு வர்த்தகம் மற்றும் இரு நாட்டு மக்களின் நல்வுறவை மேம்படுத்தல் . மோடியின் இந்த வெளிநாட்டுப் பயணம் முடிவான பிறகு , மோடி செல்ல உள்ள பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரத்திலே 22- ம் தேதி அந்த நகர நேரப்படி காலை சுமார் 8 மணி அளவில் புருசெல்ஸ் நகர ஏர்போர்ட் இருக்கும் இடமான ஸவென்டெம்மில் இரண்டு மனித வெடிகுண்டுகள் - ஆணிகள் அடங்கிய வெடிகுண்டுகள் - அடுத்தடுத்து வெடித்தன . மூன்றாவது மனித வெடிகுண்டு ஒரு மணி ந...