…. பணச் சலவை - (Money Laundering) - மூளைச் சலவை (Brain Washing)
பண சலவைக்கு மூல வித்தே மூளைச் சலவை என்பது தான் ஒரு கசப்பான உண்மை . இந்தப் போட்டி உலகத்தில் , வெற்றியை ‘ எப்படி ’ யாகிலும் அடைந்தே தீரவேண்டும் என்ற மூளைச் சலவை அநேகமாக அனைத்து நிர்வாகத்திலும் செய்யப்படுகிறது . அந்த மூளை சலவையின் வீச்சு வேண்டுமானால் மாறுபடலாம் . உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற எந்த உயர் பதவி வகித்த வங்கி அதிகாரிகளையும் அவர்கள் உள்ளத்தைத் தொட்டு , மனட்சாட்சிப்படி , சத்தியப்பிரமாணமாக ‘ இது உண்மையா ?’ என்று கேட்டால் , தயங்கியபடியே ‘ ஆமாம் ’ என்று தான் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன் . சில விதிவிலக்கு இருப்பினும் , அந்த விதி விலக்குகளிலும் 100% தூய்மை இருக்க வாய்ப்பில்லை . இதற்குக் காரணங்கள் - ‘ பதவி உயர்வு ஆசை ’, ‘ மேலிடத்து பொல்லாப்பு ஏன் ?’, ‘ ஆதரவு பதவி உயர்வுக்கு அடித்தளம் அமைக்கும் ’ - ஆகியவைகள் தான் . விஷயத்திற்கு வருவோம் . குணம் குப்பையிலே - பணம் பந்தியிலே - என்பது தமிழ் சினிமா பாட்டு . ப...