சால்வையால் வாழ்த்துவோம் எழுத்து: எஸ். சங்கரன்

சால்வைகள் அணிவித்து வாழ்த்தைப் பெறுவதற்குறிய சாதனையைப் படைத்தவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யு. புஷ்ஷும், நமது பாரதப் பிரதமர் மன்மோஹன் சிங்கும் ஆவார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த இரண்டு நாட்டுத் தலைவர்களும் பலதடைகளைக் கடந்து 123 என்ற அணுசக்தி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக அமுலுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். இது ஏதோ இரு நாடுகள் சம்பந்தப் பட்ட விஷயமல்ல. அணுசக்தி சப்ளை செய்யும் (NSG) 45 நாடுகளின் ஒப்புதல் பெறவேண்டும். இதில் உலகத்தில் உள்ள அனைத்து முன்னேறிய நாடுகளும்- சைனா உள்பட-உறுப்பினர்களாக உள்ளார்கள். அவர்களது ஒப்புதல் பெறுவதற்கு இரு தலைவர்களும் முயன்று வெற்றி பெற்றிருப்பது ஒரு ஹிமாலய வெற்றியாகும். ஏனென்றால், இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமல் (NPT), புளோட்டினம் போன்ற அணு பொருள் மற்றும் ரியாக்டர் போன்ற இயந்திரங்களையும் தங்குதடையின்றிப் பெறுவதற்கு இது வழிவகுத்து விட்டது என்பது ஒரு உலக சாதனையாகும். இந்த அந்தஸ்தைப் பெற்ற ஒரே நாடு இந்தியா ஆகும். அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாமல், இனி இந்த ஒப்புதல் வேறு எந்த நாட்டிற்கும் கொடுக்க ...