மோடிஜியின் மலேசிய அரசுப் பயணம் - பிப்ரவரி 7 - 8 - இரு தினங்கள்
2026 பிப்ரவரி 7- ம் நாள் மோடியை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மலேசியா - கோலாலம்பூர் விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றது ஒரு சிறப்பு அம்சமாகும். மோடியுடன் காரில் சேர்ந்தே பணித்தது இன்னும் கூடுதல் சிறப்பாகும் . இது இரு நாட்டு அதிபர்களுக்கும் உள்ள உறவும் , அன்பும் , புரிதலும் ஆகியவைகளின் வெளிப்பாடு என்றால் மிகை அல்ல . மலேசிய மக்களின் உற்சாக வரவேற்பு , நாதசுர இசை , கோலாலம்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் ஒரு சிறப்பம்சமாக ஒரு புதிய சாதனையைப் படைத்த ஒரு நடன நிகழ்ச்சி ஆகியவைகளைக் குறிப்பிட வேண்டும். அவைகளின் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சில குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளைப் பற்றிய படங்களை மோடிஜியின் உரையுடன் சேர்த்துப் பார்த்துப் படிக்கவும் : மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகம் தங்களின் பாரம்பரியத்தைக் கடந்த பல ஆண்டுகளாகப் பாதுகாத்து , பிரபலப்படுத்தி வருவது பாராட்டத்தக்கது. கோலாலம்பூரில் , இரு நாட்டு மக்களிடையேயான உறவின் பல்வேறு சிறப்பம்சங்களை நான் கண்டேன். இதில் கோலாலம்ப...