1000 வருடங்கள் கடந்த சோமநாதர் ஆலயம் மீட்பு ஆண்டு 2026 -ல் கோலகல விழா
சோமநாத் ஸ்வாபிமான் பர்வ் = சோமநாத் ஆன்மிக–தேசிய சுயமரியாதை விழா - 11 - 01 - 2026 குஜராத் மாநிலத்தின் புனிதத் தலமான சோமநாத் திருத்தலத்தில் நடைபெற்ற சோமநாத் ஸ்வாபிமான் பர்வ் நிகழ்ச்சி , இந்தியாவின் ஆன்மிக மரபு , பண்பாட்டு பெருமை மற்றும் தேசிய தன்னம்பிக்கை ஆகியவற்றை நினைவுகூரும் முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடி ஜி கலந்து கொண்டு , சோமநாத் ஆலயம் இந்திய நாகரிகத்தின் “ஸ்வாபிமானத்தின் சின்னம்” எனக் கூறினார். பலமுறை இடித்தழிக்கப்பட்ட பின்னரும் சோமநாத் ஆலயம் மீண்டும் மீண்டும் எழுந்து நின்றது இந்தியாவின் அடங்கா ஆன்மிக சக்தியையும் பண்பாட்டு உறுதியையும் பிரதிபலிக்கிறது என்று மோடி முழங்கினார். மேலும் , சோமநாத் ஆலயத்தின் மறுகட்டுமான வரலாற்றில் சர்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்ட தலைவர்கள் காட்டிய உறுதி , இன்றைய இந்தியாவுக்கு ஊக்கமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த “ஸ்வாபிமான் பர்வ்” நிகழ்ச்சி , கடந்த கால மரபுகளை நினைவுகூர்ந்து , எதிர்கால இந்தியாவின் தன்னம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஒரு ஆன்மிக–தேசிய விழாவாகக் கருதப்படுகிறது. ...