லோக் சபாவில் வந்தே மாதரம் பாடலின் 150 வருட பூர்த்தி உரையின் முக்கிய அம்சங்கள்
லோக் சபாவில் வந்தே மாதரம் பாடலின் 150 வருட பூர்த்தி உரையின் முக்கிய அம்சங்கள் டிசம்பர் 8, 2025 அன்று மோடியின் உணர்ச்சி பொங்கிய உரை இந்த வந்தே மாதர பாடலின் பின்னணியைப் பற்றித் தெரியாதவர்களுக்கு இது ஒரு அமிர்த பானமாகும் . 'வந்தே மாதரப் பாடலில் பாரதமாதா வணக்கம் இருப்பதால் நாங்கள் பாடமாட்டோம்' என்று அப்போதும் , இப்போதும் , எப்போதும் சொல்லும் முஸ்லீம் இனத்தவர்களை ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் சகித்துக் கொண்டு அதுவே இந்தியா இரண்டாகப் பிளவு பட வழிவகுத்த சரித்திரத்தையும் மோடி தமது உரையில் குறிப்பிட்டுள்ளார் . அவரது உரையின் மிகவும் முக்கிய பகுதியை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம் . இது ஆங்கில உரையின் தழுவலான மொழியாக்கம் . - ஆசிரியர் - வாய்மை . வந்தே மாதரம் பங்கிம் சந்திரரால் 1875 வருடம் இயற்றப்பட்டது . அப்போது இந்தியா பிரிட்டிஷின் அடிமையாக இருந்தது . தங்களின் ஆட்சியை நீடிக்கவும் , இந்திய மக்களின் சுதந்திர தாகத்தை அழிக்கவும் , அப்போதைய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு இந்திய மக்க...