மோடியின் 4 நாட்கள் அரசுப் பயணம் - ஜப்பான் & சீனா - 29 ஆகஸ்ட் - 1 செப்டம்பர் 2025
மோடியின் 4 நாட்கள் அரசுப் பயணம் - ஜப்பான் 15-வது வருட உச்சி மா நாட்டில் பங்கேற்பு - 29 - 30 ஆகஸ்ட் 2025 இரு நாட்கள் & ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ( SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பு - 31 ஆகஸ்ட் - 1 செப்டம்பர் 2025 இரு நாட்கள் ஜப்பான் இரு நாட்கள் அரசுப் பயண விவரங்கள்: மோடிக்கு ஜப்பான் டோக்கியோவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது மோடியின் எட்டாவது ஜப்பான் விஜயமாகும் . தற்போதையை ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடனான முதல் சந்திப்புமாகும் . மோடியை ஜப்பானிய பெண்கள் காயத்திரி மந்திரம் சொல்லி வரவேற்றது ஒரு சிறப்பாகும் . இந்திய பாரம்பரிய உடை அணிந்து கைகளைக் கூப்பி வணங்கியபடி , காயத்ரி மந்திரத்தை உச்சரித்து , இந்தியில் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நிகழ்வு , இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஆழமான கலாச்சாரப் பரிமாற்றத்தையும் மரியாதையையும் பிரதிபலித்தது. மேலும் இந்தியப் பாரம்பரியங்கள் , ஆன்மீகப் பழக்கவழக்கங்கள் எல்லைகளைக் கடந்து உலகளவில் ஆழமாகப் பதிந்துள்ளதை இது எடுத்துக்காட்டியது. இந்த மனமார்ந்த செயல் , இரு நாடுகளு...