சிந்தனைச் சிதறல்கள்
1. காதல் சின்னம் தாஜ்மஹால் : சரித்திர உண்மைகள் தெரிந்த பிறகும் , அதையும் மீறி மக்கள் மனத்தில் சில சின்னங்களைப் பற்றிய எண்ணங்கள் மாறாமல் பதிந்து விடுகின்றன . பளிங்கு மாளிகையான அந்த தாஜ்மஹால் ஷாஜஹானால் தன் “ காதல் ” மனைவி மும்தாஜின் நினைவாக எழுப்பிய கல்லறை . ஆனால் , மும்தாஜ் பிறவியில் ஒரு ராஜபுத்திரி . ஒரு சிப்பாயின் மனைவி . அவளை அடைய அந்தச் சிப்பாயைக் கொன்றான் ஷாஜகான் காதல் வயப்பட்டு அல்ல காமம் வயப்பட்டு . மேலும் சில உண்மைகளை ஒரு மின் அஞ்சல் மூலமாக எஸ் . பலராமன் அனுப்பி உள்ளார் . அந்தப் பட்டியல் இதோ : மும்தாஜ் ஷாஜகானின் 7 மனைவிகளில் 4- வது மனைவி . மும்தாஜ் தனது 14- காவது பிரசவத்தின் போது இறந்தவர் . மும்தாஜ் இறந்த பிறகு , ஷாஜகான் மும்தாஜின் தங்கையை மணந்து கொண்டார் . இறுதியாக அந்த மின் அஞ்சல் ஒரு கேள்வியுடன் முடிகிறது : இதில் காதல் எங்கே இருக்கிறது , அன்பர்களே ! சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்த பேட்டியின் ஒரு பகுதியை இங்கே கொடுத்...