Posts

உழைக்கும் மோடி – உயரும் பாரதம்

Image
  ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் உயிர் நாடி அந்த நாட்டின் விவசாய உற்பத்தியைப் பொருத்துள்ளது என்ற பொருளாதாரக் கொள்கையை தமிழ் நாட்டின் அற்புதக் கவிஞர் ஒளவையார் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமது தனிப் பாடலில் குறிப்பிட்டுள்ளார் . வரப்புயர நீர் உயரும் என்று தொடங்கும் பாடல் வரிகளின் படம் தான் இடது பக்கத்தில் உள்ளது .   உற்பத்தி உயர வேண்டியது அனைத்து விவசாய விளைபொருட்களும் என்பது தான் ஒளவை நமக்கு அறிவுறுத்தும் பொருளாதார கொள்கையாகும் . அதைத் தான் மோடியும் தமது நீண்ட கால வளர்ச்சித்   திட்டமான விக்சிட் இந்தியா 2047 என்ற வளர்ந்த பாரதம் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் . அதன் ஆரம்ப முயற்சிதான் பிரதம மந்திரி கிசான் திட்டம் மூலம் குறு - சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக    ₹6000  மூன்று தவணைகளாக ₹ 2000 வீதம் வரவு வைக்கப ்படுகிறது . இந்த திட்டம் டிசம்பர் 2018 ஆண்டு முதல் தொடங்கப்பட்டு , இதுவரை 22 தவணைகளில் நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடிக்க...